தமிழகத்தில் சமீப காலமாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 502 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதன்படி சேலத்தில் 27 பேர், திருவள்ளூரில் 28 பேர், செங்கல்பட்டில் 28 பேர், கோவையில் 42 பேர், குமரியில் 52 பேர் மற்றும் சென்னையில் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு 7 மாவட்டங்களில் பாதிப்புகள் 7 முதல் 19-க்குள் இருக்கிறது. எஞ்சிய 20 மாவட்டங்களில் ஒற்றை இலக்க எண்ணில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. நடப்பாண்டில் மட்டும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3408 ஆக இருக்கும் நிலையில், 152 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். தற்போது மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்கள் மற்றும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பொது இடங்களில் கட்டாயமாக்கப்படவில்லை. தற்போது மூன்றாவது அலை எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு சூழ்நிலை தான் நிலவுகிறது. ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய சூழலோ, ஆக்சிஜன் தட்டுப்பாடோ, பலி எண்ணிக்கை அதிகரிப்போ கிடையாது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.