சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் பிறகு ஏப்ரல் 20-ம் தேதி மதுரையில்அதிமுக  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் செயற்குழு கூட்டம், அதிமுகவில் உறுப்பினர்களை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு பூத் கமிட்டி அமைத்தல், போதை கலாச்சாரத்தை கண்டுகொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம், சட்டமன்ற மற்றும் ஜனநாயக மரபுகளை சீரழிக்கும் திமுக அரசுக்கு கண்டனம், நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம், திமுகவுடன் ரகசிய உறவு வைத்து அதிமுகவை அளிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கண்டனம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றுக்கு கண்டனம், தமிழ்நாட்டின் கடன் சுமையை அதிகரித்த திமுக அரசுக்கு கண்டனம், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் விழா பொது குழு கூட்டங்களுக்கான மறுத்த திமுக அரசுக்கு கண்டனம், அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மீது திமுகவின் பொய் வழக்குக்கு கண்டனம், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற களப்பணி ஆற்ற தீர்மானம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.