கோவையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, திமுக ஆக்கிரமிப்பு மன்றங்களை அகற்றுவதில்லை. சிவானந்த காலனியில் இப்பிரச்சனை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த அரசாங்கமும் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி அரசு பணிகளை கோட்டை விட்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பாக இருக்கிறது. அமைச்சர் கல் எடுத்து அடிப்பது, நிர்வாகிகள் ஓபன் சேலஞ்சு விடுவது போன்றவை கட்சியை சேர்ந்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போன்று இருக்கிறது” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.