சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது, ஒரே நாளில் 9 கொலை, ஏடிஎம் கொள்ளை என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று ஆளுங்கட்சியை விமர்சித்தார். மேலும் திமுகவினர் ஒட்டகத்தில் வாக்கு சேகரிப்பது கோமாளித்தனமாக இருக்கிறது என்றும் ஈரோட்டில் வாக்காளர்களை அடைத்து வைப்பதாகவும் திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

மேலும் இடைத்தேர்தலை குறிவைத்து தான் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியினர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை, ஒட்டகத்தில் செல்கிறார்கள். வடை, பஜ்ஜி, போண்டா சுடுகிறார்கள். வாக்கு சேகரிக்கும் போது ஒட்டகத்தில் செல்வது தவறு. சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், இடைத்தேர்தல் திமுகவுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் என்றார்.