
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் மிஹிர் (16) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் 26 ஆவது மாடி குடியிருப்பில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.