அண்ணாமலை வெளியிட்ட DMK பைல்ஸ் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டு  இருப்பதாக திமுக பொருளாளர் டி.ஆர் பாலு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது கடந்த மே மாதம் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரக்கூடிய இந்த அவதூறு வழக்கில் விசாரணைக்காக இன்று பாஜகவினுடைய மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகி இருந்தார்.

இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 18வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பாக  பாஜகவினுடைய மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகி இருந்தார். அவதூறு வழக்கு தொடர்பாக நீதிபதி கேட்ட கேள்விக்கு,  தன் மீது தவறு இல்லை. உண்மையைத்தான் கூறியிருப்பதாக அண்ணாமலை நீதிபதி முன்பாக விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் அடுத்த விசாரணைக்காக 21ஆம் தேதி ஆஜராக சொல்லி வழக்கை தள்ளி வைப்பதாக  உத்தரவிட்டிருக்கிறார். இதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,  இந்த வழக்கை தொடர்ந்து எதிர்கொள்ள இருப்பதாக  அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார்