செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி, இன்று திராவிட இயக்கத்தினுடைய மாடல் என்று சொல்லக்கூடிய திரு.ஸ்டாலின் அவர்கள்,  இந்த திராவிட இயக்கத்தை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா பெருந்தகை அவர்கள். எவ்வளவு அவமானங்களுக்கு இடையே… எவ்வளவோ சோதனைகளுக்கு இடையே…

தமிழ் மக்களை  தட்டி எழுப்பி,  குறுகிய காலத்திற்குள் அரசியல் கட்சியாக கொண்டு வந்து… அரசியல் கட்சியை மிக வேகமாக…  இந்திய துணை கண்டத்திலேயே எந்த மாநிலமும் சாதிக்காத சாதனையை பேரறிஞர் அண்ணா பெருந்தகை அவர்கள்,  1967லே இந்த இயக்கத்தை ஆட்சி பொறுப்புக்கு அமர்த்தினார்கள்.

இந்த இயக்கத்தை ஆட்சி பொறுப்புக்கு அமர்த்திய  அடித்தளமாக இருக்கின்ற பேரறிஞர் அண்ணா பெருந்தகை  அவர்களை வேறொரு கட்சியினுடைய தலைவர் விமர்சனம் செய்கிறார்…  கீழ்த்தனமாக விமர்சனம் செய்கிறார். அதைப்பற்றி கவலைப்படாமல் கொள்கையை பற்றி பேசுவதற்கு திரு. ஸ்டாலின் அவர்களுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொள்கை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது ? நான் ஒன்றை கேட்கிறேன். இன்று இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார். மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் எமர்ஜென்சி கொண்டு வந்தார். எமர்ஜென்சி கொண்டுவரும்போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதே ஸ்டாலின் கைது செய்யப்பட்டு.. மிசா வீரனே, மாவீரனே, என்றெல்லாம் சொன்னார்கள். அன்று இவர்களுக்கு பெரிய பட்டங்கள் எல்லாம் கொடுத்தார்கள். அப்படி பட்டம் கொடுத்து… அதை வைத்து அரசியல் செய்த திரு.ஸ்டாலின் அவர்களும்,  மறைந்த அவர்களுடைய தந்தை திரு.கருணாநிதி அவர்களும் அப்போதெல்லாம் காங்கிரஸ் இயக்கத்தையும்,  காங்கிரஸ் தலைவர்களையும் என்ன விமர்சனம் செய்தார்கள் ? இப்போது அதே காங்கிரஸோடு கூட்டு  சேர்ந்து இருக்கிறார்கள். கொள்கையை பற்றி பேசுவதற்கு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ? என்பதை நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.