
அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பு காரசாரமாக, விமர்சனத்துக்குள்ளாகும் வகையில் போவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான்,
நீங்க விரும்புகிறீர்கள். அவர் கரசரமா பேச வேண்டியதா இருக்கு. நீங்க ஏதாவது ஒரு கேள்வி கேக்குறீங்க. உங்களுக்குள்ளே ஒரு இது இருக்குல்ல…. கேமராவை வச்சு, மைக்கை வச்சு, புடிச்ச உடனே… நீங்க பத்திரிக்கையாளராவே கருதுவது இல்லை. பரமாத்மாவாக கருதுகிறார்கள் சில பேர். அவங்க எதை வேணாலும் கேட்கலாம்…. முன்னாடி இருக்குறது முட்டா பய, நம்ம கேக்குறதுக்கு பதில் சொல்லணும் முடிவு எடுத்துட்டு, கேள்வி கேட்கிறபோது, கோவம் வந்துருது…
கோபம் என்ற உணர்ச்சி இல்லனா சகோதரா… நாங்க ஏன் இந்த வேலை செய்ய வரணும் ? கோபம் என்ற ஒன்று இல்லனா…. சீமான் கோடம்பாக்கத்தில் இருந்திருப்பான். எதுக்கு இவ்வளவு ஊர் ஊரா…. தொண்டை தண்ணி வற்றி… பசி, பட்டினியுமா…. தூக்கம் தொலைச்சு, வேலை வேலைக்கு சாப்பிடாம… பெத்த தாயை பார்க்காமல்…. புள்ள குட்டிய பாக்காம… எதுக்கு வெயில் நின்னு, உழைக்கணும் ? கோபம் தான்.
இந்த அநீதி…. இந்த அக்கிரமம்… இந்தக் கொடுமை…. இவ்வளவு கேள்வி கேக்குறீங்க இல்ல…. ஒரு தக்காளி விலை, வெங்காய விலை 200 ரூபாய் என்றால் ? எப்படி வாழ்றது, அந்த கோபம் தான். இப்பதானே வந்திருக்காரு… ஒரு அதிகாரி, ஐபிஎஸ். காவல்துறையிலிருந்து இருந்து இருக்காரு, மிடுக்கா இருந்திருப்பாரு, கோவமா இருந்திருப்பாரு…. வருவாரு கொஞ்சம், கொஞ்சமா…. எங்க அம்மா தமிழிசையோ, அண்ணன் பொன் ராதாகிருஷ்ணனும் இப்படி கோவப்பட்டதில்லை. நான் எல்லாம் கோவப்பட்டால்….. ரொம்ப தேவைக்கு அதிகமா பேசும்போது தான் ஏய்… விடுப்பா, அப்படின்னு சொல்ல வந்துருது.
நல்ல கேள்வி வச்சிட்டு காத்திருப்பாங்க, அவுங்களுக்கு கேட்க வாய்ப்பு கொடுக்காம, ஒரே ஆளே கேள்வி கேட்டுட்டு இருக்கும்போது… அது சரியா இல்ல இல்ல… எனக்கு ஒரு நாகரிகம் தேவைப்படுது, எனக்கு ஒரு நிதானம் தேவைப்படுது, தன்மை தேவைப்படுது. அதே இது எல்லாருக்கும் இருக்கணும்ன்றது தான் நம்மளுடைய கோட்பாடு. கேள்வி கேக்குறவங்க பதில பெறுறவங்க.
ஒரு சிறந்த பதில் என்பது, நல்ல கேள்விக்கு கிடைத்த பரிசு என்கிறார்கள். அப்ப நல்ல கேள்விகள் வரும்போது நல்ல பதில் வரும் என அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் பேசியது, திமுக பாஜக இரண்டையும் எதிர்த்து அரசியல் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.