செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  1979 சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட். கேஸ் நம்பர் 603. அதுக்கப்புறம் அவங்க என்ன சொல்றாங்க ? கவர்னர் ஒருத்தர பார்த்து சந்தோஷப்பட்டார்ன்னா….   அவர் மந்திரியா இருக்கலாம்,  இல்லனா மந்திரி இல்லை எந்திரின்னு  கான்ஸ்டியூசன் சொல்லுது. ராஜா சொல்லல…

அதனால 1979 ஜட்ஜ்மெண்ட்டை கவர்னரை விமர்சிக்கிற முட்டாள்கள் படிக்கணும்ங்குறேன் நான். அதற்கு அடுத்து… அதுல  என்ன சொல்றாங்க ? The Governor has the power to remove any individual Ministers. ஆகவே அரசியல் சட்டம் தெளிவாக இருக்கு. சீஃப் மினிஸ்டர் முதன்மை எக்சிகியூட்டி இல்ல கவர்னர் தான். ஆனதால்  ஸ்டாலினுக்கு சொல்றேன்னா…

உங்களுக்குன்னு பேசுறதா இருந்தா சோசியல் மீடியா சில பேர்… கொம்பு சீவுவான் உங்களுக்கு….  வாலுருவி விடுவான்…. ஆனா நீங்க வீட்டுக்கு போனீங்கன்னா, அவன் வீட்டில ஒக்காந்து இருப்பான். உங்ககிட்ட வரமாட்டான். அதனால சொல்றேன் நண்பர் ஸ்டாலின் அவர்களே….  இந்த மாதிரி இருக்கிற தீய சக்திகளை வாய மூடுங்கடானு சொல்லி, அவர்களை அடக்கி வைக்கணும். காரணம் என்னன்னா அரசியலமைப்பு சட்டம்..  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…. அரசியலமைப்பு அமர்வு சொல்லுது Governor is the Chief Executive. நீங்க கொஞ்சம் தள்ளி ஓரமா உட்காருங்கன்னு சொல்லலாம்.

அந்த அளவிற்கு அரசிலமைப்பு சட்டம் இருக்கும் பொழுது…  கவர்னர பத்தி சீண்டுறது, மோசமா பேசுறது, எத்தன யுடுப் நானும் 2 வருசமா பாத்துட்டு இருக்கேன்… இவரு மூட்டையை கட்ட வேண்டியது தான்னு… நான் கூட தான் கமெண்ட் போட்டு இருந்தேன்.  உன்னலாம் மூட்டை கட்டி அனுப்பாம அவரு போமாட்டாரு என…. அந்த மாதிரி இருக்குற சில்லறை பயலுகள கொஞ்சம் மாண்புமிகு  முதலமைச்சர் அடக்கி வைக்கணும்.

அதனால அரசியலமைப்பு சட்டம்படி மேதகு ஆளுநர் கரெக்ட்டா செயல்பட்டு இருக்கார். அதனால மத்திய அரசு என்ன வேணும்னாலும் பண்ணலாம். ஏன்னா..! அதிகாரம் என் கைல இருக்கு. உங்கள இன்னைக்கு அனுப்பிச்சா என்ன ? நாலு நாள் கழிச்சி அனுப்புனா என்ன ? ரெண்டும் ஒன்னுதான்.

என்கிட்ட அதிகாரம் இருக்கு to dismiss individual Ministers- என்பதை கருணாநிதி VS யூனியன் ஆப் இந்தியா &  OTHERS. if i  remember  correct case நம்பர் 603. அதுல தெளிவா சொல்லிருக்கு. அதுனால நாம ஊடகங்கள் எல்லாம் அநாவசியமா….  சும்மா இருக்குற சீஃப் மினிஸ்டர கொம்பு சீவி விட்டு,  அவரை பொறுப்புல இல்லாம, வீட்டுக்கு கிட்டுக்கு அனுப்பிவிட கூடாது அப்படினுனா வேண்டி கேட்கிறேன். ஏன்னா  அவர் எனக்கு  நண்பர். அவர் நலன்ல அக்கறை இருக்கறதுனால… அவர் CM -ஆ இருந்துட்டு போகட்டும்னு சொல்லுறேன் .