தமிழியக்கம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, இதில் பல தலைவர்கள், பல கருத்துக்களை சொல்லி இருக்கின்றர்கள். நம்முடைய ஒரே நோக்கம் நம்முடைய தாய் மொழியை வளர்க்க வேண்டும். நம்முடைய பெருமை. எங்க போனாலும் நான் தமிழன் என்ற பெருமை. உலகத்திலேயே பழமையான மொழி தமிழ் மொழி.
அதற்கு சொந்தக்காரர் நான் என்று உலகத்தில் எங்கே சென்றாலும் சொல்லும் அந்த இன்பம், பேரின்பம். அதெல்லாம் சொல்ல முடியாது. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும் சொல்றதுக்கு. ஆனால் இங்கே நம்ம ஊர்ல…. நம்ம நாட்டிலே வேறுவிதமான ஒரு சூழல் இருக்கிறது.
இளைஞர்களை நாம் வழி நடத்த வேண்டும் என்றால் ? அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள், அவர்களை நம்முடைய மொழி சார்ந்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கொள்கை முடிவுகளை கொண்டு வர வேண்டும். அதற்கு நிச்சயமாக நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். அவங்க அவங்க அவுங்க வழியில் பண்ணிக்கிட்டு இருக்காங்க என தெரிவித்தார்.