
நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் வசித்து வந்தவர் ஒரு ஐடி ஊழியர். இவர் கடந்த 15 ஆம் தேதி சொந்த ஊரான களக்காடுக்கு வந்துள்ளார். இவர் கிரிண்டர் ஆப் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலை (20) என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இருவருமே ஓரினச்சேர்க்கை செயலி மூலம் நெருங்கி பழகியுள்ளனர். இதனால் சொந்த ஊருக்கு வந்த ஐடி இளைஞரை சுடலை களக்காடு அருகே உள்ள வனப்பகுதிக்கு தனியாக சந்திக்க அழைத்துள்ளார்.
அதன்படி அந்த இளைஞரும் அங்கு சென்றுள்ளார். அப்போது காட்டினுள் சுடலையுடன் அவனது நண்பர்கள் மணிகண்டன், இசக்கி, பாண்டி, சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேர் அழைத்து வந்து ஐடி இளைஞரை சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் GPAY மூலம் ₹ 11,000 அனுப்பியுள்ளார். இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து ஐடி இளைஞர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து 4 இளைஞர்கள் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.