அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, விலை இல்லா அரிசியை அம்மா கொண்டு வந்தாங்க. விலைவாசியை கட்டுப்படுத்தியவர் புரட்சித்தலைவர் MGR. கருணாநிதி உடைய ஆட்சியில் பார்த்தீங்கன்னா….  எங்கு பார்த்தாலும் அரிசியே  கிடைக்காது.  கப்பக்கிழங்கு தான் வாங்கி சாப்பிடணும். அரிசி எல்லாம் கேரளாவுக்கு கடத்திட்டங்க. பலாக்கொட்டையை  அவிச்சு சாப்பிடுவாங்க. ஹாஸ்டல்ல மாணவர்களுக்கு சாப்பாடு கிடையாது.

இதை எல்லாம் மாற்றி தமிழ்நாட்டில் அரிசி வேண்டும் என்பதற்காக….   இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களின் எந்த முதலமைச்சரும் செய்யாத துணிந்து முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உன்னாவிரதம் இருந்தார்.  மத்திய தொகுப்பில் இருந்து அரிசி கொடுக்கணும்…  சத்துணவு திட்டத்திற்கு கொடுக்கணும்….  உடனே மத்திய அமைச்சரை அன்னை இந்திரா காந்தி அனுப்பி வைத்தார்கள்.   உடனே கொடுத்து அதிலிருந்து அரிசி விலையை கட்டுப்படுத்தியவர் எம்ஜிஆர்.

அதே போல புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,  இந்த இயக்கத்தில்  பொறுப்பேற்ற பிறகு 1991 இல் ஆட்சிக்கு வந்ததும் பெண் சிசுக் கொலையை நடந்துச்சு. அம்மா சொன்னாங்க எங்க தென் மாவட்டங்களில்… அதுவும் குறிப்பா எங்க ஊர் உசிலம்பட்டி பகுதி, தேனி பகுதி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் எல்லாம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மேல் ஒரு பெண் குழந்தை பிறந்தால் ? கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுவார்கள்.

இதற்காக பாரதிராஜா ஒரு படமே எடுத்தாங்க.  கருத்தம்மா படம். பெண் சிசு கொலை நடக்க கூடாது என்பதற்காக ? அம்மாவுக்கு குடும்பம் இருந்துச்சா ? அம்மா கல்யாணம் பண்ணாங்களா ? இல்ல இல்ல என்ன பாருங்க ? மன உணர்வு….  அவங்க இரண்டு பேரும் தலைவரும்,  அம்மாவும் அரசியலின் அதிசய பிறவிகள்.  தலைவருக்கும் வாரிசு கிடையாது,  வாரிசு இருந்தது.  அரசியல் பக்கமே வர விடல. கோட்டை பக்கமே வர விடல என தெரிவித்தார்.