தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 64.22 லட்சம் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆண்கள் 29 லட்சத்து 80 ஆயிரத்து 71 பேர், பெண்கள் 34 லட்சத்து 41 ஆயிரத்து 766 பேர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 294 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மாற்றித் திறனாளி வகை பிரிவினரும் உள்ளனர். 98,763 ஆண் மாற்றுத்திறனாளிகளும், 10,650 பெண் மாற்று திறனாளிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 327 மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.