
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் காவல்துறை அதிகாரிகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் பெண் ஒருவரை sheriff ஒருவர் கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
காணொளியில் பெண் ஒருவர் தனது கணவர் காரணம் இன்றி கைது செய்யப்படுவதை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்த sheriff அந்த பெண்ணை கீழே தள்ளி பயங்கரமாக தாக்குகிறார். அப்போது அந்தப் பெண் தன்னை தொட வேண்டாம் என்று கூற அந்த பெண்ணின் கணவரும் அவளை தாக்க வேண்டாம் அவளுக்கு புற்றுநோய் இருக்கிறது என கூறுகிறார்.
அந்த காணொளியில் இந்த அதிகாரியின் முழங்கால் பெண்ணின் முதுகில் இருந்ததா அல்லது கழுத்தில் இருந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் தன்னால் மூச்சு விட முடியவில்லை என கூறியுள்ளார். இந்த காணொளி வெளியானதையடுத்து விசாரணை நடந்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி sheriff அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.