அமெரிக்காவிடமிருந்து தன்  நாட்டை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளும். இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் அதனை வடகொரியா கண்டு கொள்வதாக தெரியவில்லை. கடந்த மே மாதம் வட கொரியா தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ பணிகளை உளவு பார்க்கும் விதமான செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இது வடகொரியாவின் தீபகற்ப கடலில் விழுந்து நொறுங்கியது. இதனை மிகப்பெரிய தோல்வியாக எண்ணிய வடகொரியா தவறுகளை கண்டுபிடித்து மீண்டும் முயற்சி செய்வோம் என தெரிவித்திருந்தது.

இதற்கிடையே தென்கொரியா வடகொரியா ஏவிய செயற்கைக்கோளின் உடைந்த பாகங்களை நீரில் மூழ்கி தேடும் வல்லுநர்கள் மூலமாக தேடி கண்டு எடுத்தது. அவற்றை ஆராய்ந்து பார்த்தபோது அவற்றிற்கு உளவு  பார்க்கும் திறன் இல்லை என தெரியவந்துள்ளது. ஏவுகணையின் முக்கிய பாகங்களை நாங்கள் மீட்டெடுத்து ஆராய்ந்ததில் வடகொரியா ஏவிய செயற்கைக்கோளுக்கு உளவு பார்க்கும் திறன் இல்லை என தென்கொரியா கூறியுள்ளது.