அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில்அதிபர் வசிப்பதால் எப்போதும்  பலத்த பாதுகாப்பு இருக்கும். மாளிகையில் மட்டுமல்லாது அதை சுற்றி இருக்கும் பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படும். சம்பவத்தன்று வெள்ளை மாளிகையில் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெள்ளை நிற பவுடர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்த அதிகாரிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பொருளாக இருக்கலாம் என்று பயந்து மாளிகையில் இருந்தவர்களை வெளியேற்றினர்.

அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் அது தாக்குதலுக்கான பொருள் இல்லை என்பதை உறுதி செய்தனர். அதன் பிறகு அந்த பொடியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் அது கோகைன்  எனும் போதை பொருள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிக பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் கோகைன் எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.