தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நிதிநிலை அறிக்கை, ஆளுநரல் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு அமைச்சரவை கூட்டத்தில் மார்ச் 20 ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புது திட்டம், அறிவிப்புகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) வரும் மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.