செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மொத்த பணிகள் பள்ளிகளில் 92 பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ரூபாய் 37 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த 92 பணிகளில் 24 பணிகள் முடிவுற்றிருக்கின்றன. அதேபோல் கல்லூரிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பணிகள் 30 பணிகள்…  செலவிடப்பட வேண்டிய தொகை என்பது 41 கோடியே 53 லட்ச ரூபாய் செலவில், சுமார் 30 பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நான்கு பணிகள் முடிவுற்றிருக்கின்றன.

இப்படி இந்து சமய அறநிலைத்துறை என்பது அறம் சார்ந்த இது போன்ற பணிகளில் முழுமையாக ஈடுபட்டு கொண்டிருப்பதால் தான்,  ஒருபுறம் கல்விக்கு முக்கியத்துவம் தந்து… மறுபுறம் அன்னதானத்திற்கு முக்கியத்துவம் தந்து…  இன்றைக்கு இரண்டு திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் என்று இருந்ததை 8 திருக்கோயில்களாக மாற்றி இந்த 8 திருக்கோயில்களில்….

ஒரு நாளைக்கு 92 ஆயிரம் பேர் அளவிற்கு பக்தர்கள் உணவு அருந்துகின்ற ஒரு நிலையை ஏற்படுத்தி ஆண்டிற்கு ரூபாய் 100 கோடி அளவில் இந்தத் திட்டத்திற்கு செலவு செய்து,  இறைப் பசியோடு வருபவர்களை வயிற்றுப் பசி இல்லாமல் செய்திருக்கின்ற முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் என்பதை இந்த நேரத்தில் கோடிட்டு காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.