
அயலக தமிழர் தினம் 2024 காண விருது வழங்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எனக்கு உடல் நலம் இல்லை. உற்சாகமாக இல்லை என்று நேத்து ஒரு பத்திரிகைகளை எழுதி இருந்தாங்க. அதை படிச்சப்ப எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு. எனக்கு என்ன குறை ? தமிழ்நாடம் , தமிழ்நாடு மக்களும் மகிழ்ச்சியா இருக்கும் போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு ? நேத்து ஒரு வீடியோ பார்த்தேன்.
சென்னை சார்ந்த ஒரு சகோதரி பேசுறாங்க…. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஆயிரம் ரூபாய் வந்துருச்சு, பொங்கல் பரிசா ஆயிரம் ரூபாய் வந்துருச்சு, அரிசி – சர்க்கரை – கரும்பு வந்துருச்சு, வெள்ள நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் கிடைச்சிருச்சு. ஒரு மாசத்துல முதலமைச்சரே 8000 ரூபாய் கொடுத்துட்டாரு.
பொங்கலுக்கு யாரையும் நான் எதிர்பார்க்க தேவையில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த சகோதரி. அவர் முகத்துல பாக்குற மகிழ்ச்சி தான் எனக்கான உற்சாக மருந்து. எனக்கு மக்களை பற்றி தான் எப்போதும் நினைப்பை தவிர என்னை பற்றி இருந்ததில்லை. எந்த சூழ்நிலையிலும் என்னோடு மக்கள் தான். மக்களோடு தான் இருப்பவன் நான். என் சக்தியை மீறி உழைப்பவன் நான். இது மாதிரி செய்தி எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, உழைத்துக் கொண்டே இருப்பேன் என தெரிவித்தார்.