தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக குறைந்த வட்டியில் அனைவருக்கும் வீடு கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட பல கடன்கள் வழங்கப்படுகின்றன. தற்போது இந்த கடன்களுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன்கள் 20 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே சம்பள கடன் ஏழு லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாயாகவும், சிறு வணிக கடைகளுக்கான கடன் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தனிநபர் பிணைய கடன்கள் ஒரு நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை அளிக்கப்பட வேண்டும். ஒரு லட்சம் வரை தனிநபர் பிணைய கடனுக்கு இரண்டு நபர்கள் பிணையம் அளிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. பிணையம் அளிக்கும் நபர்கள் அரசு அல்லது தனியார் துறையில் சம்பளம் பெறும் பணியாளராக இருப்பது அவசியம்.