வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் வலுவடைந்து வரும் நிலையில், வரும் 5ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.