இந்தியாவில் இளம் பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக வெளியான தகவலை மத்திய அரசின் PIB Fact check மறுத்துள்ளது. பிரதான் மந்திரி அட்லி லட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் இளம் பெண்களுக்கு 1.60 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியானது. இதனை நம்ப வேண்டாம் என அறிவுறுத்திய மத்திய அரசு இதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் தனிப்பட்ட தகவல்களைத் தந்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.