தமிழகத்தில் நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. அதே சமயம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என மாவட்டங்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மலை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.
