இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு மெசேஜ் அனுப்புவது மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவது, லிங்க் அனுப்புவது என்று பலவிதமாக மோசடி செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது செல்போனில் இந்த விதமான செயலிகளை மட்டும் டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று தற்போது FBI எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது whatsapp, எஸ்எம்எஸ் மூலம் வரும் லிங்குகள், இமெயில் லிங்குகள், ApK பைல்கள், Third party ஸ்டோர்களில் இருந்து செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சோசியல் மீடியாவில் இருந்து வரும் நீக்குகளையும் தொட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. செல்போனில் செயலியை டவுன்லோட் செய்யும் போது google play store, ஆப் ஸ்டோர் மற்றும் ஐ ஸ்டோர்களில் இருந்து டவுன்லோட் செய்யலாம். மற்ற ஸ்டோர்களில் இருந்து செயலியை டவுன்லோடு செய்யும் போது அது பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆப்பிள் ரேட்டிங் மற்றும் ரிவ்யூகளை படிக்க வேண்டும். வங்கி அல்லது நிதி செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன்பு வங்கியின் இணையதளத்தில் நேரடியாக கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்து விவரத்தை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேவையில்லாத செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.