வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற மாதம் பதினொன்றாம் தேதி துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி என நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றது. இதுவரை அஜித் திரை பயணத்தில் எந்த படமும் செய்யாத வசூலை துணிவு திரைப்படம் செய்திருக்கின்றது.

இத்திரைப்படம் 260 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றது. அண்மையில் ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் வெளியான சில நாட்களே ஆன நிலையில் இந்தியா அளவில் முதல் மூன்று இடத்தையும் துணிவு திரைப்படம் பிடித்திருக்கின்றது. ஹிந்தி வெர்ஷனில் முதலிடமும் தமிழில் இரண்டாவது இடத்திலும் தெலுங்கில் மூன்றாவது இடத்திலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பிடித்து சாதனை படைத்துள்ளது.