மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் பதவிக்காக ஷிண்டே மற்றும் பாஜகவின் பட்னாவிஸ் இடையே போட்டி இது நிலவுகிறது. ஷிண்டே விட்டுக் கொடுப்பதாக அறிவித்தார். இருப்பினும் இழுபறி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஷிண்டே, பட்னாவிஸ், அஜித் பவர் ஆகிய மூன்று பேரும் கடந்த வியாழக்கிழமை அன்று டெல்லிக்கு சென்றனர். அங்கு அமித்ஷாவை சந்தித்து அனைத்தும் சமூகமாக அமைந்தது என்று கூறினர்.
மீண்டும் மும்பை திரும்பியதும், முக்கியமான மீட்டிங்கில் ஷிண்டே பங்கேற்கவில்லை. அவர் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். அவர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தான் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். நாளை பதவி ஏற்பு விழா நடைபெறும் என பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் அறிவித்திருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
மகா.பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளராக முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அஜித் பவர் டெல்லிக்கு தனது சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளார். இவ்வாறு 10 நாட்களாக இன்னும் அரசு அமைவதில் குழப்பம் இருப்பது அவமானம் என்றும், இன்னும் ஏன் ஜனாதிபதி ஆட்சி அமல்ப்படுத்தவில்லை என்றும் இந்திய கூட்டணி தலைவர் கேள்வி எழுப்பினார். மொத்தத்தில் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.