இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான jio மற்றும் airtel ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பயனர்களுக்கு அதிக பலன்களை வழங்கி வருகின்றன. அதன்படி இந்த இரண்டு நிறுவனங்களும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது ஏர்டெல்லின் 299 ரூபாய், 319 ரூபாய், 359 ரூபாய், 489 ரூபாய் மற்றும் 509 ரூபாய் போன்ற ப்ரீபெய்டு திட்டங்களில் வரம்பில்லாத கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5 ஜி, ஃப்ரீ ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல சலுகைகளை பெறலாம்.

இந்த திட்டத்தின்படி தினசரி 1.5 ஜிபி, 2.5ஜிபி, மொத்தம் 50 ஜிபி மற்றும் 60 ஜிபி டேட்டாக்களை பெற முடியும். அதனைப் போலவே ஜியோ நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு வரம் இல்லாத போன் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ், தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் நெட்பிலிக்ஸ் தளத்திற்கான இலவச அணுகல் ஆகியவற்றை வழங்குகின்றது