இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் போது செல்போன்களை வாங்கிய நேரத்தில் இருந்த வேகத்தை அப்படியே எப்படி வைத்திருப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே ஃபோன்களில் நாம் பயன்படுத்தாத செயலியல் கோப்புகளின் பயன்பாடு தான் வேகத்தை முற்றிலும் குறைத்து விடும்.

இதனை கண்டறிய பல வழிகள் உள்ளது. ஆனால் சிறப்பாக பயன்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டியது Factory Reset என்ற முறை தான்.

உங்களுடைய போனில் உள்ள தேவையான தரவுகளை பாதுகாப்பதற்கு மெமரி கார்டு அல்லது கூகுள் டிரைவ் போன்ற cloud storage களில் copy செய்ய வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய போனை reset செய்வதற்காக பேட்டரியை சோதித்துப் பாருங்கள்.

செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று சிஸ்டம் விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதில் ரீசெட் ஆப்ஷனை கிளிக் செய்து போன் பின்னை உள்ளிட்டு எல்லாவற்றையும் உறுதி செய்த பிறகு அனுமதி அளிக்க வேண்டும்.

அதன் பிறகு தானாகவே உங்களுடைய போன் ரீசெட் ஆகும். Power , volume பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஸ்கிரீன் ஒன் ஆகும் வரை பட்டன்களை தொடர்ந்து அழுத்த வேண்டும்.

அதன் பிறகு தரவுகளை முக்கியமாக அழிக்கக்கூடும். பின்னர் erase all data அல்லது wipe all data என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய ஸ்மார்ட் போன் புதுசு போல மாறி வேகமாக வேலை செய்யும்.