
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர், நாடாளுமன்ற தேர்தல்ல சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு அதிகமா போகும் அப்படின்னு எலெக்ஷன் முடிஞ்ச அப்பறம் தான் உறுதியா சொல்ல முடியும். யாரோ ஒரு நாலு பேரு போயி….. லெட்டர் பேடோட எடுத்து லெட்டர்பேட் கட்சி ஆதரவு கொடுக்குறாங்க என்பதற்க்காக அத ஆதரவுன்னு நாம சொல்லிட முடியாது.
அவங்க வாங்குற வாக்கு பொருத்துதான் இருக்கு. அண்ணா திமுக என்பது பாஜகவில் இருந்து விலகியது சித்தாந்த ரீதீயா இல்ல, சித்தாந்தம் புடிக்கலன்னு விலகுனாங்களா… அப்படி எங்கயாவது சொல்லிருக்காங்களா…? ஒரு பதில் எங்கையாவது சொல்லிருக்காங்களா…? யாராவது இவுங்களுடைய சித்தாந்தம் எங்களுக்கு பிடிக்கலை அப்படின்னு சொன்னாங்களா…? திமுக எதிர்திசையில இருக்கு. அதிமுக அப்படி சொன்னாங்களா….
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அவர்களுக்கும் வேறுபாடு. அதனால விலகி இருக்காங்களே தவிர, அத உடனே சித்தாந்த ரீதியான எதிர்ப்பு எடுத்துகிற அளவுக்கு நான் மக்கு கிடையாது என தெரிவித்தார். அதிமுக – பாஜக விலகல் முழுக்க முழுக்க நாடகம் என நினைக்கிறீங்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் அமீர், அது தெரியாது. அவங்களுடைய சுயமரியாதைக்கான வெளிப்பாடாக கூட இருக்கலாம். அதிமுக ஒரு பெரிய கட்சியினுடைய சுயமரியாதைக்கான வெளிப்பாடக்கூட இருக்கலாம். நாடகம்ன்னு தெரியாத விஷயத்தை நான் சொல்ல விரும்பல. ஆனால் சித்தாந்த ரீதியா அவங்க விலகல என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை கருத்து என தெரிவித்தார்.