தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த படத்திற்கு பிறகு திரிஷாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜயின் லியோ படத்தில் நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் 50-வது படத்திலும் திரிஷா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தல அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று மோகன்லால் நடிக்கும் ராம் படத்தில் திரிஷா தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் தற்போது திரிஷா கைவசம் முன்னணி ஹீரோக்களின் மூன்று படங்கள் இருக்கிறது.