தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் தற்போது படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார். இவருடைய மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில் இந்திரஜா தன்னுடைய மாமாவுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக பதிவுகளை வெளியிடுவார்.

அந்த வகையில் இந்திரஜா வெளியிட்ட ஒரு பதிவை பார்த்து ரசிகர் ஒருவர் உங்கள் முறைமாமனை திருமணம் செய்ய போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இந்திரஜா ஆமாம் என்று பதில் அளித்தார். மேலும் திருமணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் இந்திரஜா தெரிவித்தார். இதனால் இந்திராஜாவுக்கு தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.