அதிமுகவின் மக்கள் செல்வாக்கை ஜீரணித்து கொள்ள முடியாத முதல்வர் ஸ்டாலின் அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டி உள்ளார்.

அதிமுக மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றம் உத்தரவை கடைப்பிடிக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கடந்த 20 ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற அதிமுக வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு கழக தொண்டர்கள், பொது மக்கள் என சுமார் 15 முதல் 20 லட்சம் நபர்கள் கலந்து கொண்டனர். 40,000 ஆயிரம் வாகனங்கள், 15 முதல் 20 லட்சம் நபர்கள் வருகை தர இருக்கும் நிலையில்,

முன்னதாக மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க கோரி மனு அளிக்கபட்ட நிலையில் அதற்கு காவல் துறையும் ஒப்புதல் அளிக்கபட்டதை தொடர்ந்து உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்து இருந்தது, ஆனால் மாநாடு நடைபெற்ற அன்று போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை என்றும்,

போக்குவரத்து போலீசாரும் குறையவாக இருந்த நிலையில் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிட்டதாகவும், முதல்வர் ஸ்டாலின் பேச்சை கேட்டு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பாதுகாப்பு பணியில் ஈடுபடாத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி ஜி பி யிடம் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார்.