திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, ஒருமைக்கண் கற்ற கல்வி – தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்று  உரைத்தார் வள்ளுவர். கல்விதான் ஒரு மனிதனை மாற்றமும், ஏற்றமும் பெற செய்யும் என்றார் அண்ணல் காந்தியடிகள். தரமான கல்வியே தமிழகத்தின் தலையாய லட்சியம் என்றார்  புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

அவ்வகையில் புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில், எங்களை வழிநடத்தி,  தமிழகத்தை முதல் மாநிலம் ஆக்கிய பெருமை அண்ணன் எடப்பாடி அவர்களை சாரும். தன் குடும்பம், தன் பிள்ளை, தன் சமூகம் என்று வாழ்ந்த சுயநல தலைவர்கள் மத்தியில்,  மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தன்னலம் துறந்து,  தவ வாழ்க்கை வாழ்ந்த  தன்னிகரில்லா தலைவர்,  எங்கள் அம்மா. அம்மாவின் வழி நின்று கொங்கு தேசத்தின் கொள்கை முரசே…

எம்ஜிஆர்-ரின் புகழ் பரப்பிய வெற்றி முரசே… அஇஅதிமுகவின் நம்பிக்கை முரசே… ஊனின்றி, உறக்கம் இன்றி,  உறங்கா விழிக் கொண்டு,  தாய்க்காத்த அரசை… தப்பாமல் காத்து வரும், அம்மாவின் செல்லப்பிள்ளை,  கழகத்தின் அன்பு பிள்ளை,  சாமானிய மனிதர்களின் அடையாளமாய்…  தமிழகத்தின் மனித உயிர்களையும், விவசாயன பயிர்களையும் காத்து வரும் சாதனை செம்மலாய்,  சரித்திர மனிதராய் விளங்கும்…  ஏழைகளின் முதல்வராய் திகழ்ந்த எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்களே என பேசினார்.