செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா, அதிமுகவும்,  பிஜேபியும் உடைஞ்சதில் பிஜேபியின் அழிவு விரைவு பெறும். ஏனென்றால் நல்லதோ,  கெட்டதோ…  இரண்டு கட்சியும் கூட்டத்தை…  பணத்தை வைத்து ஆளுகிற கட்சிகள். ஆகவே அவர்கள் ஒரு 30 சதவீத வாக்குகளை கையில் வைத்திருக்கிறார்கள்.

தொண்டனுக்கு பணம் கொடுப்பார்கள், ஓட்டு பணம் குடுப்பாங்க. எந்த முறையாக இருந்தாலும், அவர்கள் தான் பெரிய கட்சி.  பாரதிய ஜனதா கட்சி இங்கு எந்த ஆண்டிலும் வேரூன்றியதில்லை. மூன்று,  நான்கு சதவீத வாக்குகள் தான் அவர்களிடம் இருக்கின்றன.  இவர்கள் அவனுடைய பலவீனத்தின் காரணமாக, அவனுடைய முதுகிலே ஏறி சவாரி செய்து கொண்டு,  இறங்க மாட்டேன் என்று அந்த குதிரையை சவக்கால் அடித்துக் கொண்டே இருந்தார்கள்.

ஒரு நாள் அந்த குதிரை அவர்களை கீழே தள்ளி விட்டது. திமுககாரர்கள் சொல்லிறார்கள் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு  நாடகம் என்று…   அரசியல் கட்சியில் நாடகம் எல்லாம் நடத்த முடியாது. நாடகம் எல்லாம் நடத்தினால் ? அந்த கட்சி அதோடு அழிந்து விடும். தொண்டனெல்லாம் வெடி வெடித்து கொண்டாடுகிறான். நம்முடைய உழைப்பின் பயனை அவன் ஏன் அடைய வேண்டும் ?  என்கின்ற கேள்வி அவனிடம் இருக்கிறது என தெரிவித்தார்.