ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய வழக்கறிஞர் பிரிவு தலைவர் திருமாறன், முதற்கண் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் மதிப்புக்குரிய ஐயா ஓபிஎஸ் அவர்களே…. கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு.வைத்திலிங்கம் அவர்களே….  கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மதிப்பிற்குரிய அண்ணன் திரு ஜே.சி.டி பிரபாகரன் அவர்களே…. அண்ணன் திரு மனோஜ் பாண்டியன் அவர்களே….  கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் திரு.புகழேந்தி அவர்களே…

அண்ணன் திரு. மருது அழகுராஜ் அவர்களே… கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின், உரிமை மீட்பு குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதில் வழக்கறிஞர் அணி சார்பாக நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்தப் புத்தாண்டில் நமது கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு ஐயா அவர்கள், இந்த அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கொடியவர்கள் கையில் இருந்து மீட்பதற்காக எடுத்து வைக்கும் சட்டப் போராட்டத்தில், நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு அனைவருக்கும் இருக்கிறது. அது மட்டுமல்லாது மக்கள் போராட்டத்தின் முன்பும்,  நாம் மிகப் பெரும்பான்மையாக ஒரு வெற்றியை பெறுவோம் என்று நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்த அனைத்து சட்டப் போராட்டங்களிலும் மற்றும் தலைமை கழகம் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் இந்த வழக்கறிஞர் அணி உங்களுக்கு முழு விதத்திலும் எல்லாவித அர்ப்பணிப்போடு நாங்கள் செயல்படுவோம் என்று கூறி,

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, நாம் மீட்டெடுத்து,  நமது கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் இந்த சட்டமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான வாக்குகளில் வெற்றி பெற்று, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசியுடன் 2026 இல் ஆட்சி அமைப்போம் என்ற சூழ்நிலையை நாம் இந்த புத்தாண்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு,  எனது உரையினை தாழ்மையோடு முடிக்கிறேன்  என தெரிவித்தார்.