தமிழகத்தில் மருத்துவத்துறை சார்பில் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் பல புதிய வசதிகள் நோயாளிகளுக்கு செய்து தரப்படுகின்றன. இருந்தாலும் பல மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அவதிப்படுவதாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் 1021 மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் 2242 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் எம்ஆர்பி தேர்வு மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர்கள் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த பத்து நாட்களில் தமிழக அரசு மருத்துவமனைகளில் 1021 மருத்துவர்கள் மற்றும் 983 மருந்தாளர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.