இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அந்த வீடியோவில் ஒருவர் காரின் கதவை திறந்து காட்டுகிறார். அப்போது அந்த காருக்குள் வீட்டில் இருப்பது போல டைல்ஸ் பதிக்கப்பட்டு இருந்தது. இந்த டைல்ஸ் காரில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள அடிப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது இது வீடா இல்லையென்றால் காரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
