ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த சில நாட்களாக இடியுடன் பெய்த கனமழையால் மர்ரா மலை பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், தாராசின் கிராமம் முழுவதுமாக தரைமட்டமாகி, 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக “சூடான் விடுதலை இயக்கம்/இராணுவம் (SLM)” தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு ஆரம்ப அறிக்கையில், “ஒரே ஒரு நபர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவு சிட்ரஸ் பழங்கள் விளையப்படும் முக்கியமான பகுதிகளை முற்றிலும் அழித்துவிட்டது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை காரணமாக குப்பை மற்றும் சிதைந்த கட்டிடங்களுக்குள் பலர் புதைந்து கிடப்பதாகவும், உடல்களை மீட்க, ஐ.நா மற்றும் மனிதாபிமான அமைப்புகளிடம் அந்த குழு உதவி கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சமூக ஊடகங்களில் மிகவும் பரவி வருகிறது.
இதனிடையே, டார்ஃபரின் ஆளுநர் மின்னி மின்னாவி, “இது மனிதாபிமான பக்கம் பார்ப்பதற்கு மிகவும் பேரழிவான விஷயம். மக்கள் தனியாக இதை சமாளிக்க முடியாது. சர்வதேச அமைப்புகள் உடனடியாக தலையிட்டு உதவ வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.
