அமெரிக்காவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அமண்டா பைனஸ். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் தெருவில் சுற்றி திரிந்தவாறு காணப்பட்டுள்ளார். அதோடு அவர் வழியில் சென்ற காரை நிறுத்தி அதன் ஓட்டுநரிடம் பேசியுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர் கார் ஓட்டுநரிடம் மனநல சிகிச்சை பெற்று வந்தேன் என கூறியுள்ளார். இதையடுத்து அவரே 911 என்ற எண்ணுக்கு தொலைபேசி வழியே அழைப்பு விடுத்துள்ளார். அதன்பின் அவரை மீட்டு அருகில் இருந்த போலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் உதவியுடன் மனநல சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என நிபுணர் ஒருவர் முடிவு செய்துள்ளார்.