பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா மே 13ம்  தேதி தொடங்கிய நிலையில் இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலாவும் கலந்து கொண்டார். இவர் தன்னுடைய காரில் மே 18ம் தேதி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோது 70 வயது மூதாட்டி சாலையை கடந்து சென்றார். அப்போது விபத்து ஏற்படக்கூடாது  என்பதற்காக ஓட்டுநர் திடீரென  காரை நிறுத்தினார்.

இதில் எதிர்பாராதவிதமாக கைவினை அழகுடன் தயாரிக்கப்பட்ட நடிகை ஊர்வசியின் கருப்பு நிற உடை கிழிந்தது. இதனால் அவருக்கு ஏற்பட்ட மோசமான நிலைமையை பொருட்படுத்தாமல் நடந்த சம்பவத்தை மனிதநேயத்தை முன்னிலைப்படுத்தும் அர்த்தமுள்ள அனுபவமாக எடுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.

அப்போது “நான் ஒரு கிழிந்த உடையாக இதனை பார்க்கவில்லை. ஒரு உயிர் காப்பாற்றப்பட்ட தருணமாக பார்க்கிறேன். நம்முடைய வெளி தோற்றம் முக்கியமல்ல…. நம் மனதும், மனிதர்களை மதிக்கும் மனப்பான்மையும் தான் ரொம்ப முக்கியம் என்றும், நான் அந்த இடத்தில் ஒரு நடிகையாக இல்லை, ஒரு மனிதனாக அந்த வண்டியில் இருந்தேன் என கூறினார்.

இவரது பதில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில் நடிகை ஊர்வசிக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவருடைய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சிலர் நடிகை ஊர்வசியின் தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் சிறந்த மனப்பான்மையை பாராட்டி வருகிறார்கள்.