கேரள மாநில திரையுலக பிரபல மலையாள நடிகை பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர் திலீப் 84 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சூட்டிங் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பலால் பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பும் ஒருவர் ஆவார். இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு நெருங்கிய நண்பரான இயக்குனர் பாலச்சந்திரகுமார், திலீப்புக்கு எதிராக சாட்சி கூறி இருந்தார்.
இயக்குனர் பாலச்சந்திர குமாரின் சாட்சி நடிகையின் பாலியல் வழக்கில் முக்கிய திருப்பத்தை உண்டாக்கியது. இந்த வழக்கில் பாலச்சந்திரகுமார் கூறியதாவது, நடிகர் திலீபிடம் பாலியல் வீடியோ இருப்பதாகவும், இந்த வழக்கை விசாரணை செய்த அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் சாட்சி கூறினார்.இந்த நிலையில் இன்று காலை பாலச்சந்திரகுமார் இதய நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் செங்கனூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது உடல் மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது.