தமிழ் சினிமாவில் 80’களில் கலக்கிய பிரபலமான நடிகை ரேகா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தந்தை மீது அதிக பாசம் கொண்ட நடிகை ரேகா அவருக்கு கல்லறை கட்டியதோடு தந்தை சமாதியின் அருகே தனக்கும் கல்லறை கட்டி வைத்துள்ளாராம். மேலும் உயிருடன் இருக்கும் போதே நடிகை ரேகா தனக்கு கல்லறை கட்டி அதை தற்போது பராமரித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.