தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருடைய மூத்த சகோதரி அல்போன்சா. இவர் சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார். அதன்பிறகு ராபர்ட் மாஸ்டரின் மற்றொரு சகோதரி சோபா வசந்த். இவர் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் வேலை கிடைக்காததால் சோபாவிடம் சென்று கேட்டபோது விரைவில் வேலை கிடைத்துவிடும் என்று கூறிய அவர் திடீரென தன்னுடைய அலுவலகத்தை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளார்.

சோபா வசந்த் 17 பேரிடம் 74 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதோடு பாதிக்கப்பட்டவர்கள் whatsapp குழு ஒன்றினையும் அமைத்து சோபாவை தேடி வந்த நிலையில் அவர் வேறொரு இடத்தில் ஆபிஸ் அமைத்து மீண்டும் மோசடி வேலையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது காவல்துறையினர் சோபாவை கைது செய்துள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.