
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். 4 சைமா விருதுகளை பெற்ற இவர் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக கருதப்படுகிறார். இவர் தற்போது நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து “ரெட்ரோ” என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் பூஜா ஹெக்டேவிற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பூஜா ஹெக்டேவின் ரசிகர் ஒருவர் இணையதளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “இது போன்ற நிறம் தான் வேண்டுமென்றால்… அந்த நிறத்தில் இருக்கும் ஹீரோயினையே தேர்வு செய்திருக்கலாமே. … பூஜா ஹெக்டேவை அவரது நிறத்திலேயே விட்டு விடுங்கள்” என்றும், நடிகை பிரியா ஆனந்த் சிரிப்பது போல எமோஜியையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் பூஜா ஹெக்டேவை பிரியா ஆனந்த் கேலி செய்து விட்டார் என்று வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக பிரியா ஆனந்திடம் கேட்டபோது “நோ கமெண்ட்ஸ்” என்று சிரித்தவாறு பதில் கூறினார்