தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாறி செல்வராஜ் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அழகோடு நல்ல அறிவும் உள்ளவர் என்று புகழ்ந்து கமல்ஹாசன் பேசினார். மேலும் இதை கேள்விப்பட்ட கீர்த்தி சுரேஷின் ரசிகர்களோ அது உண்மைதான் என அவரை பாராட்டி வருகிறார்கள்.