தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா தற்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நடிகை தமன்னா பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அடிக்கடி வெளியே செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜய் வர்மா மற்றும் தமன்னா இருவரும் ஒன்றாக சேர்ந்து இரவு டின்னருக்கு சென்ற போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பது உறுதி தான் என்று கூறி வருகிறார்கள்.