தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் படங்களில் கோடிக்கணக்கான சம்பளங்களை வாங்குகிறார்கள். இதனால் அவர்கள் வருமான வரி கட்டுவது அவசியம். ஆனால் சில நடிகர்கள் சரிவர வருமான வரி கட்டாததால் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள். அந்த வகையில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் ரஜினி ஆகியோரின் வீடுகளில் கூட ஐடி ரெய்டு நடைபெற்றுள்ளது.

இருப்பினும் சில 5 தமிழ் நடிகர்கள் இதுவரை வருமானவரித்துறை சோதனையில் சேர்க்கவில்லை. அவர்கள் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி நடிகர் அஜித், உலக நாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் இதுவரை வருமானவரித்துறை சோதனையில் சிக்கவில்லை. இந்த லிஸ்டில் நடிகர் விஜய்யின் பெயர் இடம் பெறவில்லை. ஏனெனில் கணக்கில் வராத 15 கோடி ரூபாய்க்கு 1 1/2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு விஜய் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.