
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் எனக் கூறும் ஏ.எல் சூர்யா நடிகர் விக்ரம் இன்னும் 3 மாதங்களில் இறந்து விடுவார் என்று பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இது குறித்து ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர். நான் ஞானம் அடைந்து விட்டேன். நான் சொல்வது எல்லாம் நடக்கிறது.
பலரை காப்பாற்றியுள்ளேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் வெற்றி பெறுவார் என்று கூறினேன். வாரிசு படம் கண்டிப்பாக பிளாப்பாகும் என்று கூறினேன். நான் சொல்வதெல்லாம் நடந்தது. தளபதி 67 படமும் ரிலீஸ் ஆகாது. நான் என்னை பார்க்க வருபவர்களுக்கு தீட்சை கொடுப்பேன். நடிகர் விக்ரம் இன்னும் 3 மாதங்களில் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் ஏ.எல் சூர்யாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
