
பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் சயிப் அலிகான். இந்நிலையில் இவரது வீட்டிற்குள் கடந்த புதன்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் புகுந்து சயிப்பை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக காயப்பட்ட நடிகர் சயிப்பை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றது அவரது மூத்த மகன் இப்ராஹிம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் சயிப்புடன் மருத்துவமனைக்குச் சென்றது அவரது 7 வயது மகன் தைமூர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரத்தம் சொட்ட வெள்ளை குர்த்தாவில் ஒருவர் ஆட்டோவில் ஏறியதாகவும், அவருடன் வந்த சிறுவன் மருத்துவமனைக்கு செல்ல இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? என்று கேட்டதாகவும் ஆட்டோ டிரைவர் தெரிவித்துள்ளார்.