தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள மக்கள் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 30 அகதிகள் அமெரிக்கா நோக்கி பேருந்தில் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்து பியூப்லா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறி கேட்டு ஓடி சாலையில் கவிழ்ந்து விபதித்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும் மீதமுள்ள 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.